புதினங்களின் சங்கமம்

சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்த முற்பட்டவர்க்கு நேர்ந்த கதி!

களுத்துறையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை நாகொடை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் குறித்த மாணவியும் அவரது தாயாருமே இவ்வாறு கடத்தப்பட்ட நிலையில் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.