குருக்கள்மடத்தில் கார் மதகுடன் மோதி விபத்து!! வீடியோ
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் இன்று (14) அதிகாலை 3 மணியளவில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. விபத்து சம்பவிக்கும்போது காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் ஒருவருக்கு காலில் உடைவு ஏற்பட்டதுடன் மற்றவர்களுக்கும் சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.




