ஐரோப்பிய நாடு ஒன்றில் காணாமல் போன அஷ்வதி ராஜசேகரன் சடலமாக மீட்பு! நடந்தது என்ன?
அயர்லாந்தில் டப்ளினின் செரிவுட் பகுதியில் இருந்து காணாமல் போன இளம்பெண் அஷ்வதி ராஜசேகரனின் உடல் Bray கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டப்ளினின் Grafton Street பகுதியில் அமைந்த ஹெய்ஸ் கன்சல்டன்சியில் ஐடி பணியாளராக இருந்த அஷ்வதி, சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. லூவாஸ் பயணத்திற்குப் பிறகு அவர் தொடர்பில் இல்லையென நண்பர்கள் Garda Siochana (அயர்லாந்து போலீஸ்)யில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து Dalkey மற்றும் Killiney கடற்கரைப் பகுதிகளில் கோஸ்ட் கார்டு மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேடுதலின் போது டால்கி பீச்சுக்கு அருகில் அஷ்வதியின் லாப்டாப் மற்றும் பை கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இன்று காலை Bray பகுதியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் மருத்துவமனைக்கு சென்ற நண்பர்கள் அது அஷ்வதியின் உடலென அடையாளம் கண்டனர். தற்போது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக Loughlinstown மருத்துவமனை மோர்ச்சரியில் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து அயர்லாந்துக்கு வந்திருந்த அஷ்வதிக்கு Letterkenny பகுதியில் பணிமாற்றம் கிடைத்திருந்தது. அங்கு செல்லத் தயாராக இருந்த நேரத்திலேயே இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

