யாழ். கோண்டாவிலில் கழுத்தறுத்து பெண் கொலை!!
யாழ். கோண்டாவில் பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த புண்ணியகாந்தன் சந்திராதேவி (வயது61) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில், இன்று காலை கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

