புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து சுவிஸ் சென்று தனது பாடசாலைக் கால காதலியை சந்தித்த 49 வயதான வவுனியா ராஜேஸ் மீது கணவன் கத்திக் குத்து!

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவரும் பிருத்தானியாவில் கோவென்ட்ரி (Coventry) பகுதியில் நீண்டகாலம் வசித்து வந்த குடும்பஸ்தருமான 49 வயதான பஞ்சரட்ணம் ராஜேஸ் என்பவர் சுவிஸ் லூசர்ன் (Lucerne) பகுதியில் நபர் ஒருவரின் கத்திக் குத்துக்கு உள்ளான நிலையில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பொலிசாரால் அப்பகுதியில் உள்ள Swiss Paraplegic Centre – Nottwil மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில ஒரு சில நாட்களின் முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேல் குறித்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

தனது பாடசாலை நண்பி ஒருவரை சந்திப்பதற்காக கடந்த மாத தொடக்கத்தில் பிருத்தானியாவிலிருந்து ராஜேஷ் சென்றுள்ளார். தனது நண்பன் தன்னை சந்திக்க வரவுள்ள தகவலை மனைவி தனது கணவனுக்கு மறைத்ததாலேயே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்லாந்தின் லூசர்ன் Polizeiposten Bahnhof Luzern பொலிசார் தெரவித்த தகவல்களின் படி

லூசர்ன் ரயில் நிலையத்திலிருந்து வாடகை வாகனம் ஒன்றில் நண்பியை சந்திப்பதற்கு நண்பியின் வீட்டுக்குச் சென்ற ராஜேஸ் அங்கு தங்கியிருந்த சமயம் அங்கு வந்த கணவன் ராஜேஸ் மீது சமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் ராஜேஸின் முதுகுப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதன் காரணமாக காயமடைந்த ராஜேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கபபட்டுள்ளார்.

தவறான புரிந்துணர்வின் காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.