இலங்கையில் இன்றும் கொரோனாவால் இருவர் உயிரிழந்தனர்!
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

