புதினங்களின் சங்கமம்

மருதனார்மடம் கொத்தணி; மற்றும் ஒரு நபருக்கு கொரோனாத் தொற்று!

மருதனார்மடம் கொத்தணியில் புதிதாக மற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள விபரம் வருமாறு,

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இருவக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

– உடுவில் 1

– கடற்படை தனிமைப்படுத்தல் நிலையம் 1

முன்னதாக யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக் கூடத்தின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.

அதில் மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த ஐவரும், வவுனியாவைச் சேர்ந்த மூவரும் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.