புதினங்களின் சங்கமம்

காமேனி மரணத்தை உறுதி செய்த டிரம்ப்! “சரணடையுங்கோ.. இல்லாட்டி மரணம்!” ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்போது காமேனியின் மரணத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்!
தற்கு இதுவே மாபெரும் சாட்சியாக அமைந்துள்ளது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது Truth Social வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “வரலாற்றின் மிகக் கொடூரமான மனிதர்களில் ஒருவனான காமேனி இப்போது இறந்துவிட்டார்” என வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து NBC மற்றும் ABC News செய்திச் சேவைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய இந்தத் துல்லியமான தாக்குதலில் இருந்து காமேனியால் தப்பிக்க முடியவில்லை என்பதையும், அவரது ரகசியப் பதுங்கு குழிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதையும் ஆணித்தரமாக உறுதி செய்துள்ளார்.

காமேனி மட்டுமில்ல.. தலைவர்கள் கூண்டோடு அழிப்பு!
இந்த மாபெரும் தாக்குதலில் அலி காமேனியின் சகாப்தம் மட்டும் முடிவுக்கு வரவில்லை. ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் (IRGC) உச்சக்கட்டத் தளபதிகள் தொடக்கம், முக்கிய முடிவுகளை எடுக்கும் பல தலைவர்களும் கூண்டோடு அழிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் ஒட்டுமொத்தத் தலைமைத்துவமும் ஒரே இரவில் சிதைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது பேட்டியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

“சரணடையுங்கோ.. இல்லாட்டி மரணம்!” – ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை
ஈரானிய ராணுவத்துக்கும் மக்களுக்கும் டிரம்ப் இப்போது ஒரு பகிரங்கமான அழைப்பையும், இறுதி எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

“ஈரானியப் படைகள் இப்போதே ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எங்களிடம் சரணடைந்தால், அவர்களுக்குப் பொதுமன்னிப்பும் (Immunity) பாதுகாப்பும் வழங்கப்படும். மக்கள் பக்கம் நில்லுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு மரணமே மிஞ்சும்!” என டிரம்ப் நேரடியாகச் சவால் விட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால் ஈரானிய ராணுவம் இப்போது இரண்டாக உடைந்திருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.