புதினங்களின் சங்கமம்

கனடா கணவனிடம் காசு வாங்கி யாழ்ப்பாண காதலனுக்கு ஐ போன் வாங்கிக் கொடுத்த தர்மினி!! காதலனை கனடாவுக்கும் கொண்டு செல்ல திட்டம்!!

கனடாவிலிருந்து கணவனால் அனுப்பப்பட்ட பணத்தில் 2 லட்சம் ரூபாவில் இளைஞனுக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்து யாழில் சிக்கலில் மாட்டியுள்ளாள் இளம் குடும்பப் பெண். யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த தர்மினிக்கும் (பெயர் மாற்றம் யாழ் புத்துாரைச் சேர்ந்தவருக்கும் 2021ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பெற்றோர் இல்லாத நிலையில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த தர்மினி உயர் தொழில்நுட்பகல்லுாரி மாணவியாவார். கணவன் திருமணத்திற்கு முன் விபத்து ஒன்றில் சிறிது அங்கவீனமான நிலையிலேயே தர்மினியை சீதனம் ஏதும் இல்லாது திருமணம் செய்துள்ளார். இந் நிலையில் கனடாவுக்கு கடந்த வருட முற்பகுதியில் சகோதரியின் ஸ்பொன்சர் மூலம் கணவன் சென்றுள்ளார். அதன் பின்னர் தர்மினி கணவனின் பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.தர்மினி மற்றும் பெற்றோருக்கான பணம் கணவனால் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வந்துள்ளது. கணவரது சகோதரியும் கனடாவிலேயே வசிக்கின்றார். சகோதரியும் தனது பெற்றோருக்கான செலவு பணத்தை அனுப்பி வந்துள்ளார்.

இந் நிலையில் ஐபோன் ஒன்று வாங்கப் போவதாக தர்மினி கனடாவிலிருந்த கணவருக்கு கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்த நிலையில் தர்மினி 2 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். அது வாங்கப்பட்டு சில நாட்களிலேயே காணாமல் போய்விட்டதாக தனது கணவருக்கு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தனது வீட்டுக்கு வரும் தனது உறவுக்காரர்கள் சிலரில் சந்தேகம் கொண்டுள்ளார். அத்துடன் தர்மினியை பொலிசாரிடம் முறையிடுமாறு கூறியுள்ளார். ஆனால் தர்மினி பொலிசாரிடம் முறையிடாது இருந்துள்ளார். அத்துடன் தான் இதுவரையில் பொலிஸ்நிலையம் சென்றதில்லை எனவும் ஆகவே பொலிஸ் நிலையம் செல்ல பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது தந்தையை கொண்டு பொலிஸ் நிலையத்தில் கணவர் முறையிட்டதாக தெரியவருகின்றது. தர்மினியின் தொலைபேசி இலக்கத்தையும் பொலிசாரிடம் கொடுத்து முறையிட்டுள்ளனர். இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த தொலைபேசியின் இமி நம்பரை வைத்து அதனுள் இருந்த சிம் இலக்கத்தை அடிப்படையாக வைத்து நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தனக்கு, தனது காதலியே இந்த தொலைபேசியைத் தந்ததாக புதுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார். அத்துடன் அந்த தொலைபேசியில், தனது காதலி என தெரிவித்து அவளுடன் தியேட்டர் மற்றும் வேறு இடங்களில் இருந்த புகைப்படங்களையும் காட்டியுள்ளார். இதனையடுத்து முறைப்பாடு கொடுத்த கணவனின் தந்தை மற்றும் தொலைபேசியின் உரிமையாளரான மனைவி ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். புகைப்படத்தில் காணப்பட்ட பெண் திருமணமான இன்னொருவரின் மனைவி என்பதை அறிந்து பொலிசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்ன மேற் கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணே இளைஞனுக்கு தொலைபேசி கொடுத்துள்ளதை பொலிசார் கண்டு பிடித்தனர். உயர்தொழில்நுட்பகல்லுாரியில் கற்கும் போது இருவரும் காதலித்துள்ளதும் பொலிசாரின் விசாரணைகளில் அறியவந்துள்ளது. அதன் பின்னர் இருவரையும் கடும் எச்சரிக்கை செய்த பின்னர் விடுவித்துள்ளனர்.அத்துடன் தர்மினி தான் கனடா சென்றவுடன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு குறித்த இளைஞனை கனடாவுக்கு எடுக்க திட்டம் போட்டிருந்ததும் பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதை விட இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவெனின், குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது இளைஞனின் காதலி என இன்னொரு யுவதி பொலிஸ் நிலையத்தில் அவனது பெற்றோருடன் வந்து நின்றதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்மினியும் குறித்த இளைஞனும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தர்மினியின் திருமணமான சகோதரி காதலு்ககு எதிர்ப்புத் தெரிவித்தே புத்துார் பகுதி இளைஞனை திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.