புதினங்களின் சங்கமம்

இந்த சிரிப்பு ஒருநாளுடன் மட்டும் முறிந்து விடாமல் நீடிக்க வேண்டும்!

இது யார் மனதையும் புண்படுத்துவதற்கான பதிவு அல்ல!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து 3252 வேலை இல்லா பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்!

இலங்கையில் இந்த ஆண்டு பட்டம் பெறுகின்ற பல்கலைக்கழக மாணவர்களின் நிலையும் அதுதான்!

இந்த மாணவியின் முகத்தில் தெரிகின்ற புன்சிரிப்பு அவளது பெற்றோரின் முகத்தில் தெரிகின்ற புன்சிரிப்பும் நீடிக்க வேண்டுமானால் அரச தொழில் ஒன்று விரைவாக கிடைக்க வேண்டும்.

நான் நினைக்கிறேன் அரச வேல வாய்ப்பு கிடைப்பதற்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும் போல.

ஆண் பிள்ளையை பெற்றவர்கள் பல்கலைக்கழக கல்வி முடிவடைந்து விட்டது வேலை கிடைத்துவிடும் திருமணத்தை பேசலாம் என நினைத்தால் சமூகம் அவனை வேலையில்லா பட்டதாரி என அறிமுகம் கொடுக்கிறது.

சரி படித்து விட்டோம் அரச வேலைவாய்ப்பை ஏன் தேட வேண்டும் தனியார் துறைக்கு போகலாம் என நினைத்தால் இசைத்துறை அல்லது கலை பிரிவில் சைவ சித்தாந்தம் படித்தவர் தனியார் துறையில் என்ன வேலையைச் செய்வது என்பது ஒருபுறம் கேள்வி.

பெண் பிள்ளையை பெற்றவள் வேலையில்லா பட்டதாரி என்றாலும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பேசிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையாவது இருக்கும்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் வேலையில்லா சித்தமருத்துவத்துறை மாணவர்களை சந்தித்தேன் 37 வயதை கடக்கிறது வேலைக்காக காத்திருக்கிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பை பெற முடியாத துறைக்கு மாணவர்களை உள்ளீர்த்தது யாருடைய தவறு.

சரி பட்டம் கிடைத்த சித்த மருத்துவத் துறை மாணவர்களுக்கு இலங்கையில் என்ன வேலையை வழங்குவது இதற்கு யார் பதில் கூறுவார்கள்!

அவர்களும் வேறு வழி தெரியவில்லை அரசியல்வாதிகளின் வாசல் படிகளை ஏறி இறங்கினார்கள் இறுதியில் அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவர்கள் என்ற சங்கத்தை தான் ஆரம்பிக்க முடிந்தது.

ஆக மொத்தத்தில் பட்டமளிப்பு விழா என்பது முகநூல்களுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் யாழ் பல்கலைக்கழகம் இந்த வருடம் 3252 வேலையில்லாப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளமையே உண்மையான விடையம்!!!!!.

நன்றி

Sornalingam Varnan