யாழில் பாடசாலை அதிபர் பாலகுமார் பலி! எந்தவித குடிப்பழக்கமும் இல்லாதவருக்கு அந்த உறுப்பு பழுதாகியது ஏன்?
திடீர் சுகவீனமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் யோ. பாலகுமார் தைப் பொங்கல் தினத்தில் மரணமானார். இவர் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனத் தெரியவருகின்றது. கொழும்பு விவேகானந்தாக் கல்லுாரியின் உப அதிபரான இவர், கடந்த வாரம் தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாண உறவுகளோடு கொண்டாட விரும்பி குடும்பத்தினரோடு அவரது சொந்தி இடமான யாழ்ப்பாணம் அச்சுவேலிக்குச் சென்ற வேளை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டு காலமாக ஈரல் (Liver) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இவர் எந்தவித குடிப்பழக்கமும் இல்லாதவர் எனவும் ஈரல் பாதிப்படைந்தது எதற்காக என தெரியவில்லை எனவும் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

