இந்தியச் செய்திகள்

கடன் வசூல் கொடுக்கவில்லை என கூறி யுவதியைக் கடத்தி கெடுத்த திருநாவுக்கரசு கூட்டணி!!

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர், தந்தை கனகராஜ் வசமிருந்த பைனான்ஸ் தொழிலில் முழுநேரமாக இறங்கிய திருநாவுக்கரசு. லட்சங்களில் மட்டுமே கடன் வழங்குவது என்றிருந்ததால், அதற்கேற்றவாறு அதனை வசூல் செய்யச் சில இளைஞர்களையும் அடியாட்களாக வைத்திருந்திருக்கிறார்.

ஒரு கடன் விவகாரத்தில் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திருநாவுக்கரசு தவித்தபோது, அவருக்கு ஐடியா தந்துள்ளார் சபரிராஜன். அவருக்கு பெண்களுடன் அதிக அளவில் தொடர்பு உண்டு. அவரது கேங்கிற்கும் இந்த விடயம் தெரியும்.

ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் நடத்த திருநாவுக்கரசிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். வட்டிப் பணம் வாங்க சென்ற வகையில், கல்லூரியில் படிக்கும் அந்த வீட்டு பெண்ணுக்கும் சபரிராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

முதலில் தாங்கள் செய்துவந்த தொழிலைக் காப்பதற்காகக் கடன் வாங்கிய அவர், அதன் பின் திருநாவுக்கரசுவிடம் பணம் வாங்கி வேறு சிலருக்கு வட்டிக்குக் கடன் கொடுத்துள்ளார். இந்த வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அவரது கடன் தொகை ஏறியுள்ளது.

2 ஆண்டுகளுக்கும் மேலாக வரவு செலவு இருந்துவந்த நிலையில், திடீரென்று அந்த மாணவியின் குடும்பம் பணம் தர மறுத்தது. உன்னால் முடிந்தால் பணம் வாங்கிக்கொள் என்று திருநாவுக்கரசிடம் சவால் விட்டது. வழக்கமாகவே சின்னப்பம்பாளையம் வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிக்கும் திருநாவுக்கரசு. அன்று நண்பர்களுடன் சரக்கு போதையில் பணத்தை எப்படி வசூல் செய்வது எனத்தெரியவில்லை என நண்பர்களுடன் புலம்பியிருக்கிறார்.

அப்போது, சபரிராஜன் அவர்களது வீட்டில் இருக்கும் பெண்ணைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்றிருக்கிறார். நான் கூப்பிட்டா அந்த புள்ளை எங்கே வேணாலும் வரும். அவளை வெச்சுக்கிட்டு அவங்கப்பன்கிட்டே பணம் வாங்கலாம் என கூறியிருக்கிறார். ஒரு பெண்ணைத் தூக்கிவந்து வைத்துவிட்டு, கொடுத்த கடனைக் கேட்பது என்பது அது க்ரைம் ஆகிவிடும். ஆனாலும் பரவாயில்லை, சரக்கு போதையிலிருந்து திருநாவுக்கரசு திருநாவுக்கரசு அதற்குச் சம்மதித்தார். அந்த கும்பலும் அதற்கு தலையாட்டியது தெரியவந்துள்ளது.