புதினங்களின் சங்கமம்

பாத்றுாம் ஆணுறை! மனைவியின் கள்ளக்காதல் சதி! பிரான்சில் 8 வருட சிறை! இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சுகுமாரின் கதை இது!

பிரான்சில் 10 வயதான தனது சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சுகுமார் (பெயர் மாற்றம்) நாடுகடத்தப்பட்டு இலங்கை திரும்பி தற்போது யாழில் ஒரு பகுதியில் வாழ்ந்து வருகின்றார். சிறைக்குள் இருக்கும் போது தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியிருந்தாலும் சிறையின் 2ம் மாடியிலிருந்து குதித்தால் ஏற்பட்ட கால் வெடிப்பு மற்றும் தலைப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தற்போது அங்கவீனமானவராகவே வாழ்ந்து வருகின்றார்.

சுகுமார் 2003ம் ஆண்டு திருமணமானவர். யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஜெயவதனி என்ற 24 வயதான யுவதியை இலங்கை்கு வந்து பதிவுத்திருமணம் செய்த பின் 2004ம் ஆண்டு பிரான்சிற்கு அழைத்தச் சென்றார். 2006ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பெண் பிள்ளைக்கு அப்பாவானார் சுகுமார். 2010ம் ஆண்டு இன்னொரு மகனும் பெற்றெடுத்து இரு குழந்தைகளுக்கு தந்தையானார்.

பிரான்சில் உள்ள உணவகம் ஒன்றில் Commis de cuisine ( சமையல்கலை நிபுணர்) ஆக வேலை செய்ததால் நன்றாக பணம் சம்பாதிக்கும் ஒருவராக சுகுமார் காணப்படார். அதனால் மனைவி வேலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. இருப்பினும் மனைவி ஜெயவதனி Artisan ஆக வீட்டிலிருந்தே சில பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அதற்கு சுகுமாரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளார்.

சுகுமாரின் மகளுக்கு 10 வயது. சுகுமார் தனது மகளை கண்டிப்புடன் வளர்த்து வந்துள்ளார். ஆடைகள் விடயத்திலும் செல்லம் கொடுக்கும் விடயத்திலும் சுகுமார் கரார் பேர்வழியாக மகளின் கண்களுக்கு புலப்பட்டார். இவ்வாறான நிலையில் ஜெயவதனியின் தென்மராட்சி ஊரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 2012ம் ம் ஆண்டளவில் அவர்கள் வசித்து வந்த Lyon பகுதிக்கு அண்மையில் குடியேறினார்கள். Lyon நகரம் சுவிஸ் ஜெனிவாவுக்கு அண்மையில் உள்ள ஒரு நகரமாகும். குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவன் ராஜநேசன் ( தற்போது 54 வயது) ஜெனிவாவில் உள்ள வர்த்தக அமைப்பு ஒன்றுடன் தொடர்புபட்ட பிரான்ஸ் நிறுவனம் ஒன்றின் சாரதி. பல நாட்கள் சுவிஸ் பல நாட்கள் பிரான்ஸ் என்று ராஜநேசன் இருப்பது வழமை.

இவன் தான் ஜெயவதனியின் கள்ளக் காதலன் ராஜநேசன்

ராஜநேசன் குடும்பத்தினரை தற்செயலாக சந்தித்த சுகுமார் குடும்பம் அருகருகே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் உடனடியாகவே நட்பாகினார்கள். சுகுமார் வேலைக்கு சென்று திரும்பும் நேரங்களில் சுகுமாரின் மகள் சுகுமார் வாங்கிக் கொடுக்காத சில விளையாட்டுப் பொருட்களுடன் காணப்படுவாள். இது யார் தந்தது என மனைவியிடம் கேட்ட போத ராஜசிங்கம் அண்ணை தனது மகளுடன் வந்தவர். அவர் கொடுத்தது என மனைவி கூறுவாள். இதனால் சுகுமார் பெரிய அளவில் சந்தேகப்படாது இருந்துள்ளார். அத்துடன் அவரது 4 வயதான மகன் சுகுமாரிடம் அங்கிள் வந்தவர். அங்கிள் தந்தவர் என பிறிட்சிக்குள் இருந்தத பல்வேறு இனிப்புப் பொருட்களை கொண்டு வந்து காட்டிய போதும் சுகுமார் சந்தேகப்படவில்லை.

சுகுமார் இரவிலேயே வேலைகள் இருந்தன. வேலை முடிந்து வரும் போது நள்ளிரவு 1 மணி ஆகிவிடும். அதன் பின்னர் மற்றொரு வேலைக்கும் சுகுமார் செல்வது வழக்கம். அது Homme de ménage எனும் 3 மணித்தியால தற்காலிக வேலை. அவ் வேலை மாலை 1 மணி தொடங்கி 4 மணிவரை செய்யும் வேலை. அந்த வேலை முடிவடைந்த பின்னர் தனது இரு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் 2 வது வேலைக்கு சென்று பிள்ளைகளுடன் வீடு திரும்பிய சுகுமார் பாத்றுாம் சென்ற போது ஹொமட்டில் பாவித்த ஆணுறை ஒன்று நீரால் அடித்துச் செல்லாது சொருகுப்பட்டிருந்ததை அவதானித்து அதிர்ந்துள்ளார். அதனை கம்பி ஒன்றினால் எடுத்துப் பார்த்த போது அதனுள் உடலுறவு மேற்கொண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டது. இதன் பின்னரே சுகுமார் தனது மனைவி மேல் சந்தேகப்படத் தொடங்கியுள்ளார்.

உடனடியாக மனைவியை கேட்டு சண்டை செய்யாது மனைவியின் கைத் தொலைபேசியை ஆராய ஆயத்தமானார். தனது 2 வது மகனிடம் மனைவி தனது கைத்தொலைபேசி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அந்த தொலைபேசி மகனிடம் இருக்கும் போது அதனை பெற்று மனைவியின் தொலைபேசியில் கதைக்கும் உரையாடல்களை தன்னியக்கமாகவே பதிவு செய்யும் செயற்பாட்டை செய்து முடித்திருந்தார்.

அதன் பின்னரே தனது மனைவிக்கும் ராஜநேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார், அதன் பின்னர் குடும்பம் குலைந்தது. மனைவி சுகுமாரால் தாக்கப்பட்டாள். பொலிசார் வந்து சுகுமாரை கைது செய்த போது மனைவி மிக கொடூரமாக செயற்பட்டு தனது மகளை கற்பழிக்க முற்பட்டார் என பொய்ப் புகாரும் கொடுத்தாள். அதற்கு சாட்சியாக 10 வயது மகளையும் தயார் செய்து பொலிசாரிடமும் நீதிமன்றிலும் சொல்ல வைத்தாள்.

2015ம் ஆண்டு சுகுமாருக்கு 8 வருட சிறையும் அதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு நாடுகடத்தலும் நடைபெற்று முடிந்தது. சிறைக்குள் இருக்கும் போது ஓரு தற்கொலைக்கு முயன்று உயிர்தப்பியிருந்தாலும் தற்போது அங்கவீனமாகவே உள்ளார்.

யாழில் உள்ள தனது இளைய சகோதரி குடும்பத்தினருடன் தற்போது வாழ்ந்து வரும் சுகுமார் தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் ஒருவருடன் சேர்ந்து பலருக்கு தன்னம்பிக்கை அளித்துவரும் ஒருவராக உள்ளார். அவரை ஊடகச்செயற்பாட்டாளர் சந்தித்து உரையாடிய போது தனது மனைவி, மகளின் புகைப்படங்களை தர மறுத்ததுடன் தன்னையும் அடையாளப்படுத்த விரும்பவில்லை.

அவரது மகன் தற்போது அவருடன் அடிக்கடி தொடர்பு கொள்கின்றார். தற்போது 21 வயதாகும் அவரது மகள் அவரை 2021ம் ஆண்டு சிறைக்கு சென்று சந்திக்க முற்பட்டும் அவர் சந்திக்க விரும்பவில்லை. தற்போதும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார்.

மனைவியின் காம வெறியும் சதியும் சுகுமார் வாழ்வை சின்னபின்னமாக்கியுள்ளது.