யாழ் வேலணைப் பகுதியில் மாட்டுக் கள்ளன் குட்டி போதைப்பொருளுடன் பிடிபட்டான்!!
யாழ் வேலணைப் பகுதியில் குட்டி என அழைக்கப்படும் மல்லாகத்தைச் சேர்ந்த அருந்தவராசா 2 கிராம் 500 மி.கி ஹேரோயின் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரால் நேற்று முன்தினம் தைப்பொங்கல் தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் தீவகப்பகுதியிலிருந்து மாடுகளைக் களவாக பிடித்து அங்கு வைத்தே கொன்று அறுத்து இறைச்சியாக்கி யாழ் நகரப்பகுதிகளுக்கு கொண்டு வந்து விநியோகிப்பவன் எனத் தெரியவருகின்றது. இவனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

