யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளாதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. இவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிக்குட்டி அல்லது மாமா மகன் என அழைக்கப்படும் மணல் கொள்ளையனின் டிப்பர் வாகனம் கள்ள மண் ஏற்றிச் சென்ற போது சாவகச்சேரிப் பொலிசார் துரத்திச் சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.







