யாழ் கொக்குவிலில் சாராய வெறியில் வந்த காவாலிகள் செய்த அலங்கோலம் (Photos)
மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த வயோதிபர்களை தாக்கியதோடு மட்டுமன்றி அவர்களின் உடமைகளையும் உடைத்து நாசம் செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் புகையிரத வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் எனும் இடத்தில் நடைபெற்றது.
சம்பவத்தில் ரவீந்திரன் (வயது 70), செல்வராசாத்தி (வயது 65), ஆகியோரே காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று மாலை குறித்த பகுதியில் வசிக்கும் ஒருவர் மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் கதவைப் பூட்டி உள்ளே இருந்தனர். ஆயினும் அந்த வீட்டின் கண்காணிப்புக் கமரா மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் உபகரணங்களை குறித்த மதுபோதையில் வந்த நபர் சேதமாக்கியதோடு மட்டுமல்லாமல் வீட்டுக் கதவை உடைத்து வயோதிபர்களையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



