எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவித்து முடங்கியது யாழ்ப்பாணம்! (Video)

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.

இதற்காக வடக்கு முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.

அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Image may contain: people walking and outdoor Image may contain: outdoorImage may contain: outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoorImage may contain: tree and outdoor

error

Enjoy this blog? Please spread the word :)