இலங்கையில் மீண்டும் ஊரடங்கு! புதிய அறிவிப்பு!
இலங்கையில் இரண்டு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத் தளர்வினை மீண்டும் நீக்கி ஊரடங்கினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான புதிய அறிவிப்பினை ஜனாதிபதி செயலம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8மணி முதல் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுமையிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
2 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 18ஆம் திகதி திங்கட் கிழமை காலை தளர்த்தப்பட்டு பின்னர் மே மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8மணி முதல் காலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

