மனைவியை ஏமாற்றிவிட்டு வெளிநாடு செல்லமுற்பட்டவருக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையில் தனது மனைவிக்கு சொந்தமான ஒரு கோடி பெறுமதியான காணிக்கு போலி ஆவணம் தயாரித்து தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த நபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
முறைப்பாடு செய்த மனைவி, கணவனை விட்டு சென்றதாகவும், சந்தேக நபரான கணவரே அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதாக சந்தேக நபரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்த நிலையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காணி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறும் என நீதிபதி இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

