புதினங்களின் சங்கமம்

யாழில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் படுகாயம்!! பதற்றம் நிலவுகின்றது!!

யாழ், அரியாலை நெளுக்குளம் பகுதியில் இன்று துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் குறித்து தெரியவருகையில்,

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிரக்டர் வாகனம் மீது விசேட பொலிஸ் பிரிவினர் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் இதுவரை வெளியாகவில்லை.