அரை கிலோ மீட்டர் வரை நிர்வாணமாக ஓடிய சிறுமி.. சீரழித்த 3 காமுகர்கள்..!!
கோவிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை 3 மர்ம நபர் வழிமறித்து சிறுமியை கற்பழித்து விட்டு தப்பிப் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டோரமாக 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இவர்கள் 3 பேரையும் பார்த்த அந்த இளைஞர்கள், சிறுமிகளை வழிமறித்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த 3 பெண்களில் ஒரு பெண் அந்த 3 காமுகர்களிடம் சிக்கியுள்ளார். அந்த சிறுமியை, யாரும் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று கற்பழித்துள்ளனர். இதையடுத்து தப்பித்து சென்ற இரண்டு பெண்களும் உதவிக்கு ஆள் தேடியுள்ளனர்.
யாரும் உதவாத நிலையில், ஒரு நபர் காப்பாற்ற முன் வந்துள்ளார். அந்த சிறுமி கடத்திச்சென்ற இடத்திற்கு, இளைஞரும், அந்த சிறுமியும் சென்றுள்ளனர். இதனைக் கண்ட 3 பேரும் தப்பித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இளைஞரை கண்டு அந்த சிறுமி பயத்தில் அரை கிலோ மீட்டர் நிர்வாணமாக ஓடியுள்ளார். அதன் பின் அந்த நபர் சிறுமியை பிடித்து காப்பாற்ற வந்துள்ளேன் என்று கூறி உடையை கொடுத்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.

