புதினங்களின் சங்கமம்

கல்கிஸ்ஸ கடலில் 3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்!!

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.