கிளிநொச்சி நகரில் நடக்கும் கொடூரம்!! சிறீதரன் எம்.பியும் காரணமா? புகைப்படங்கள்
ரணில் விக்ரமசிங்க அரசிடம் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கி அதனை பல கோடி ரூபாக்களுக்கு விற்றதாக பல தமிழ் பேசும் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமை என்று பெயரெடுத்த சிறிதரன் எம்பியின் கோட்டைக்குள் இவ்வளவு சாராயக்கடைகள் எவ்வாறு வந்தது?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
இன்று A9 வீதி கிளிநொச்சி ஊடாக செல்ல வேண்டிய தேவையின் நிமித்தம் சென்ற போது. வீதி சமிக்ஞைக்கு மேலதிமாக பல பச்சை நிறத்தில் வெள்ளை எழுத்துகளால் ஆன பல பெயர்ப் பலகைகள் காணக் கண்டேன். உற்றுக் கவனித்ததில் அவை யாவும் புதிதாக திறக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் என தெரிந்தது.
அட என்னடா இது பரந்தன் சந்தி தொடக்கம் அறிவியல் நகர் வரையிலான Bar 9 வீதியில் sorry A9 வீதியில் இத்தனை கடைகளா ? அட இவ்ளோ கடையிலும் போய் வாங்கி குடிக்க அங்க ஆக்கள் வேணுமே டா. என்னங்கடா போட்டிக்கு கடை திறந்தது போல……!
இந்த புகைப்படங்கள் இன்று (27) எடுத்தவை இதில் முதலாவதாக இருப்பது Bar & Restaurant அதாவது வாங்கி அங்கேயே குடிக்கலாம். இது இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது.
எல்லோரும் அரசியல்வாதிகளை சலுகை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க, போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி Bar ஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் எதிர்கால சந்ததிகள் அழிவடைவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்படுவதையும் பேசவில்லை.
தேசியம் சுயநிர்ணயம் என்று சொல்லுபவர்கள், திட்டமிட்ட இன அழிப்பு என்று சொல்லுபவர்கள், கருத்துக்களை கோர்த்து அழகாய் பேசி உணர்ச்சி பொங்க பேசுபவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர இருக்கும் அறிவாளிகள், ஆய்வாளர்கள், சமுக சிந்தனைவாதிகள், அன்மீகவாதிகள் என யாருமே இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. யாரோ சலுகை பெற்றுவிட்டனர் என்றே குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.
இது எல்லா இடத்திலும் இருக்கிறது (Bar) தானே என்பார்கள். ஆனால் பாடசாலைக்கு அருகில் கோவிலுக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் அமைப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை. மாறாக பிரதேச மக்களின் எதிர்ப்புகளே இடம்பெற்று இருக்கிறது.
அடுத்தவரை குறை கூறி, சாடி பழகிவிட்டோமே தவிர எமது சமுதாயம் சீரழிந்து போவதை தடுப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. சுய லாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்று அவர்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றீர்கள். இது மாற்றப்படல் வேண்டும்.
“இரத்து செய்யப்பட்ட அனுமதிகள்” என செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். அது செய்தி மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போலவே குறித்த மதுபான விற்பனை நிலைய நடத்துநர்கள் சிரிப்பது தெரிகின்றது.
10 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கும் உட்பட்ட குறித்த சாலையில் எனது கண்ணில் தென்பட 14 மதுபான விற்பனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டிந்தது. இன்னும் எத்தனை இருக்கின்றதோ தெரியவில்லை. (உள் வீதிகளில்)
பல்கலைக்கழகத்திற்கு அருகில் Bar & Restaurant அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது யாரும் கேட்கவில்லை எதிர்க்கவில்லை. சமுக சேவைகள் திணைக்களமும் அருகில் தான் இருக்கின்றது.
இது கடந்து செல்லும் விடயமல்ல…..!!
Copy post
இ.பாரதி
27.09.2024