கணவனை கட்டிவைத்துவிட்டு மனைவியின் நகைகள் கொள்ளை! கிளிநொச்சியில் பயங்கரம்!!
கிளிநொச்சியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை அத்துமீறிப் புகுந்த கொள்ளையர்கள் 75 வயதான வீட்டு உரிமையாளரைத் தாக்கி அவரது கை கால்களை கட்டி வைத்துவிட்டு 31 லட்ச ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மூன்று பேரைக் கொண்ட இந்த கொள்ளையர் குழு, இனங்காண முடியாதவாறு முகமூடி அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 75 வயதான வீட்டு உரிமையாளரும் 70 வயதான அவரது மனைவியும் வசிப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களது பிள்ளைகள் மூவரும் கொழும்பில் வசிப்பதாகவும் அவர்கள் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர் எனவும் தெரியவருகின்றது.
