புதினங்களின் சங்கமம்

யாழில் முதன் முதல் பாதாள உலக குழுவின் கொலையா? யாழில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் பிரிந்திரன் போதைப்பொருள் கடத்தல்காரனா? வீடியோ

கரணவாய் பகுதியில் நேற்றிரவு 12:00 மணியளவில் ராஜகுலேந்திரன் பிரிந்திரன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர்
இனம் தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில் இருந்து சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சி சி ரி காமரவில் பதிவாகியுள்ளது.
 வெட்டிக் கொல்லப்பட்ட பிரிந்திரன் தொடர்பாக ஓரிரு வாரங்களுக்கு முன் சமூகவலைத்தளங்களிலும் அரச ஊடகம் ஒன்றின் பெயரில் இயங்கும் போலியான வலைத்தளம் ஒன்றிலும் பதிவுகள் வெளியாகியிருந்தன. பிரிந்திரன் பிரான்சிலிருந்து வந்து போதைப்பொருள் விநியோகம் செய்கின்றான் என்று வெளியான பதிவுகளை நாமும் வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
https://vampan.net/74624/
அரச ஊடகமான தினகரன் பெயரில் போலியாக இயங்கும் குறித்த இணையத்தளத்திற்கு போதைப்பொருள் கடத்தும் மற்றும் பாவிக்கும் பல காவாலிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை வழங்கி வந்திருந்தார்கள். குறித்த காவாலிகள் மற்றும் புறம்போக்குகள் வம்பனுக்கும் இவ்வாறான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கி வந்தாலும் வம்பன் அவற்றை பிரசுரிப்பதில்லை. காரணம் குறித்த காவாலிகளுக்கிடையில் நடக்கும் போட்டிகளில் மாறி மாறி மற்றவர்களை போட்டுக் கொடுப்பது மற்றும் தங்களை எதிர்க்கும் அப்பாவிகள் மற்றும் பொலிசாரை  தவறானவர்கள் என கூறி புகைப்படங்களுடன் தகவல்களை அனுப்புவது என தொடர்ச்சியாக வம்பனு்க்கும் ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் குறித்த காவாலிகள் அனுப்பி வந்திருந்தார்கள். ஆனால் சரியான விசாரணைகள் இன்றி எவரும் அவர்களின் தகவல்களைப் பிரசுரிப்பதில்லை. அதனால் அவர்களே சில சமூகவலைத்தளங்களை உருவாக்கி தமக்கிடையே ஏற்பட்ட போட்டிகள் மற்றும் பிடுங்கல்களை மாறி மாறி பதிவிட்டு வந்தனர்.
இதே போலவே யாழில் செயப்பட்ட ஆவா குழு மற்றும் டில்லு குழு என்ற இரு காவாலிக் குழுக்கள் தமக்கிடையே அடிபடுவதும் தமக்குச் சொந்தமான சமூகவலைத்தளங்களில் அது தொடர்பாக தகவல்கள் வெளியிடுவதும் மாறி மாறி ஊடகங்களுக்கு தமது எதிரிகள் பற்றி தகவல்களை வெளியிடுவதும் பல காலமாக நடைபெறும் சம்பவமாகும்.
இந் நிலையில் தினகரன் என்ற அரச ஊடகத்தின் பெயரில் செயற்படும் போலி வலைத்தளம் குறித்த காவாலிகள் அனுப்பிய தகவல்களை எந்தவித பகுத்தறிவும் இன்றி புலனாய்வு செய்து போடுகின்றோம் என வடிவேலு பாணியில் செய்தி வெளியிட்டு வந்தனர். இவ்வாறு வெளியிடப்பட் பதிவு ஒன்றிலேயே குறித்த பிரிந்திரன் தொடர்பான பதிவும் வெளி வந்திருந்தது. ஆகவே பிரிந்திரன் கொலை தொடர்பில் பாதாள உலக குழுக்கள் யாழ்ப்பாணத்திலும் கொலைகள் செய்யத் தொடங்கி விட்டார்களா? என்ற எண்ணம் ஏற்பட்டு மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலை பேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை குற்றவாளிகள் இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் மோட்டார் சைக்கிளில் சந்தேக நபரகள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சி சி ரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத்திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது ,
கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை , நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் , மிக விரைவாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்கள் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சநிலையை உருவாக்கியுள்ளது.