சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை பறவைகள பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் பண்ணை முகாமையாளர் மற்றும் களஞ்சிய முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின்போது, பூங்காவின் பறவை தீவன களஞ்சிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கஞ்சா செடிகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்தமை தெரிய வந்தது. கூறப்படுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆலோசகராக பணியாற்றிய அஜித் சிறிகுமார ஹல்லகேவே கைது செய்யப்பட்டவராவார்.





