இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

தனது நண்பியுடன் அந்தரங்க உறவுக்கு தடையாக இருந்த தனது குழந்தையை கொன்ற காமுக தாய்! Video

தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

மாலை 5 மணியளவில் குளிப்பாட்டுவதற்காக தூக்கிய போது, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. உடனே குழந்தையை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை உயிரிழந்ததை காவலர்கள் விசாரித்ததில், குழந்தை மரணத்தில் சந்தேகம் இல்லை என பெற்றோர் தெரிவித்ததால், உடற்கூராய்வு செய்யாமல் குழந்தையின் உடலை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

May be an image of one or more people, people smiling and text that says "தமிழ் தமிழ் DA நண்பியுடன் லெஸ்பியன் உறவுக்காக 5 மாத ஆண் குழந்தையை கொன்ற தாய்.!"

இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்து விட்டனர்.

இந்தநிலையில் பாரதி தொடர்ந்து, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எந்தவித வருத்தமும் இல்லாமல் செல்போனை நோண்டிக்கொண்டிருந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் சுரேஷ், பாரதி வைத்திருந்த 2 செல்போனில் ஒன்றை வாங்கி சுரேஷ் பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பாரதி தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது. மேலும் தனது மனைவி பாரதி அந்த பெண்ணுடன் தன்பாலின உறவில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அன்றிரவு கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் பாரதியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் சுமித்ரா (20) என்பவருடன் 4 ஆண்டுகளாக‌ நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது. இருவரும் தன்பாலின தொடர்பில் இருந்து வந்ததாகவும் பாரதி சுரேஷிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் சுரேஷ் விசாரித்தபோது, இருவரும் நெருங்கி உல்லாசமாக இருப்பதற்கு 5 மாத குழந்தை தடையாக இருந்ததால், துருவனை கொல்ல சுமித்ரா கூறியதால், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக பாரதி தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் கொலை செய்த தாய் பாரதி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுஷ்மிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.