புதினங்களின் சங்கமம்

யாழ். ஆய்வுகூட பரிசோதனை: யாழில் 29 பேர் உள்ளிட்ட 37 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 29 பேர் உள்ளிட்ட 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (ஏப்-30) வடமாகாணத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 644 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை ஆய்வுகூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண சுகாதார திணைக்கள தரப்பில் இருந்து கிடைத்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் தொற்றாளர்கள் குறித்த விபரங்கள்….

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.