புதினங்களின் சங்கமம்

யாழ் மேளக்காரனுடன் கள்ளத் தொடர்பு!! குலதீபாவை கொன்றது எப்படி? மேளகாரனின் வாக்குமூலம் இதோ!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் , வுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மறுநாள் 12ஆம் திகதி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாள். அது தொடர்பில் நாம் வெளியிட்டிருந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

காரைநகர் தீபாவுக்கு சங்குப்பிட்டியில் என்ன நடந்தது? கணவனிடம் பொய் சொல்லிச் சென்றது எங்கே? டிப்பர் சாரதி கூறியது என்ன? அந்த பார்மசி ஓனர் பிடிபட்டது ஏன்? யாரால் கொலை செய்யப்பட்டாள்? வம்பனின் சிறப்பு புலனாய்வு தகவல்கள்!!

இந் நிலையில் குப்பிளான் பகுதியை சேர்ந்த மேளக்காரன் ஒருவன்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டமேளக்காரனை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட குலதீபாவுடன் மேளக்காரனுக்கு  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு  கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக இருவரும் தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , குலதீபாவை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் குலதீபாவுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து குலதீபா மயக்கமடைந்த நிலையில் ,அவளைக் கொலை செய்து கடலில் வீசியதாகவும் , பின்னர் தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக  மேளக்காரன் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேளகாரனை பிடித்த பொலிஸ் அதிகாரிகள் குழு

May be an image of one or more people

அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட குலதீபா அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளான்.

மேளகாரன் பயன்படுத்திய வாடகைக் கார்…

May be an image of car and van

அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்

சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் பொலிஸார் அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை குலதீபாவுக்கு மயக்க மருந்து கொடுக்க முன் குலதீபாவுடன் மேளகாரன் உடலுறவு வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் குலதீபா கடலில் சடலமாக மிதக்கும் போது உள்ளாடை (ஜங்கி) காணப்படவில்லை. அத்துடன் மேளகாரன் தவிர மேலும் பலரும் குலதீபாவுடன் உடலுறவு வைத்திருக்கலாம் எனவும் குலதீபாவுக்கு போதைமருந்து கொடுத்து பலர் உறவு கொண்டிருக்கலாம் எனவும் மேளகாரனை உரித்தெடுத்தால் பல தகவல்கள் வெளிவரும் என கருதப்படுகின்றது.