14 வயது மாணவி 58 வயது ஆசிரியரால் துஷ்பிரயோகம்! 59 வயது அதிபர் மூடி மறைத்தார்! இருவரும் கைது!
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
14 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும், அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (17) திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
