வடக்கில் போதைப்பொருள் கடத்துவோர், வாள் வெட்டில் ஈடுபடுவோர் கவனத்துக்கு..!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
தயவுசெய்து உங்கள் பேஸ்புக் ஐடிகளை இன்பொக்ஸில் அனுப்பி வைக்கவும். அத்துடன் நல்ல குவாலிட்டியான போட்டோக்களை உங்கள் பேஸ்புக்கில் நிறைய போட்டுவைக்கவும்.
முடிந்தால் கையில் ஒரு வாளை வைத்துக்கொண்டு, நாக்கை வெளியே நீட்டி, முழுசிப் பார்த்துக்கொண்டு, பல்லை நெறுமிக்கொண்டு போட்டோ எடுத்து, பேஸ்புக்கில் போட்டு வைக்கவும்.
காரணம் நீங்கள் கைதுசெய்யப்படும் போது, ஆத்திர அவசரத்துக்கு ஒரு போட்டோ கிடைக்குதில்லை. Thumbnail இல் போடுவதற்கும், செய்தியில் போடுவதற்கும் போட்டோக்கள் தேடித்தேடி நாம்படும்பாடு நமக்குத்தான் தெரியும்.
பாருங்கள் ஆனந்தன் அந்தோணிப்பிள்ளை கைதுசெய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் இதுவரை ஒரு உருப்படியான போட்டோ கிடைக்கவில்லை. அந்த ஒரேஒரு போட்டோவை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு திரும்பத் திரும்பப் போடுவது?
மற்றது யாரோ பழக்கடை ராஜனாம். செவ்வந்திக்கு வீடு கொடுத்தவராம். பேஸ்புக்கில் பழக்கடை ராஜன் என்று தேடினால் – எந்தப் போட்டோவும் வருகுதில்லை. பொறுப்பில்லாத ஆள்.
எனவே போதைப்பொருள் கடத்துவோர், ஆட்களைக் கடத்துவோர், செவ்வந்தி வகையறாக்களுக்கு உதவி செய்வோர் அனைவரும், ஊடகங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு தயவுசெய்து நல்ல தரமான போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டுவைக்கவும்.
நீங்கள் எங்க ஓடி ஒளிஞ்சாலும் ஒருநாள் உங்களையும் அலுமினிய பேப்பரால மூடுறது மூடுறதுதான். அது உங்களுக்கும் தெரியும் இல்லையா..?
அந்த ‘மத்துகம ஷானை’ பாருங்கள். ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கில் புதுப்புது போட்டோக்கள் போடுகிறார். யோகாசனம் செய்கிறார். முட்டை பொரிக்கிறார், டிவி பார்க்கிறார். நாளைக்கு அவரை கைதுசெய்து “கொற இழுவையில்” இலங்கைக்கு அழைத்துவரப்படும்போது, செய்திகள் போடும் நமக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. Thumbnail எல்லாம் இப்பவே ரெடி பண்ணி வைக்கலாம்.
அவனைப் பார்த்து திருந்துங்கள். ஊடகங்களில் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
நன்றி.

