புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மற்றொரு மரணம்; கொரோனா பலியெடுத்தது!

கொழும்பு தொற்றுநோயியல் தடுப்பு வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று உயிரிழந்த இளைஞர் கொரோனாத் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு 15 மோதரையைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 23 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.