யாழில் புதுக்காரில் போதைப்பெர்ருள் கடத்திய SM பெனாண்டோவின் மகன் சஞ்சீவ் இவன்தான்!!
புதிய காரில் போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் பிரபல வர்த்தகர் SM பெனாண்டோவின் மகன் சஞ்சீவ் பெர்னாண்டோ போதைப்பொருள் கடத்தலின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றபோதே நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே கிலோ கணக்கில் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பொலிசாரால் மில்லிக்கிராம் என வழக்கு பதியப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு அவருடன் வைத்து பிடிக்கப்பட்ட பயணப்பொதியுடனான போதைப்பொருள் யாழ் பொலிஸாரால் பத்திரமாக திருப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
ஆனால் இப்போது குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் பிரபல போதைப்பொருள் மொத்த வியாபாரியான சுலக்சன் என்பவரின் கீழ் போதைப்பொருள் வியாபாரியாக செயற்படுகின்றார்.
கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்



