புதினங்களின் சங்கமம்

குடிகார புருசன் மீது அளவு கடந்த காதல்!! இரு பொலிஸ் அதிகாரிகளின் உறுப்பை கடித்த இளம் குடும்பப் பெண்!!

அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.இரு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவு பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.