புதினங்களின் சங்கமம்

நான் ஜேவிபி ஆள் வவுனியாவுக்கு செல்ல மாட்டேன்.. ஆசிரியர் சுபாஸ்கரன் சண்டித்தனம்.

நான் ஜேவிபி தொழிற்சங்கம் வலயக் கல்வி அலுவலகத்தின் கடிதம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மல்லாவி மகாவித்தியாலய ஜேவிபி தொழிற்சங்க ஆசிரியர் சுபாஸ்கரன் கல்வி அமைச்சுக்கு சண்டித்தனம் காட்டி வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தற்காலிக இணைப்பு பாடசாலையாக மல்லாவி மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஆசிரியர் சுபாஸ்கரன் இணைப்புக் காலம் முடிவுற்ற நிலையில் மீண்டும் வவுனியா வலயத்துக்கு செல்லாது மல்லாவி மகா வித்தியாலயத்திலேயே தங்கியுள்ளார்.

இவரின் 3 வருட இணைப்பு 12.04.2023 நிறைவுற்ற நிலையில் 12.01.2024 முதலாவது நினைவூட்டல் வழங்கப்பட்ட நிலையில் 24.04.2024 இரண்டாவது நினைவூட்டல் வழங்கப்பட்டது.

இவற்றையெல்லாம் மீறி என்னை மாற்றிப் பாருங்கள் நான் யாருடைய ஆள் தெரியுமா? என கல்வி உயர் அதிகாரிகளுக்கு சண்டித்தனம் விட்டு வருகிறார்.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முகநூலில் தாக்கும் பின்னணியில் இவர் செயற்பாட்டு வருவது விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் தன்னை மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் ஏனைய ஆசிரியர்கள் இவ்வாறு கட்டளையை மீறும் சந்தர்ப்பங்களில் வடக்கு மாகாணத்தில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படட வரலாறுகளே அதிகம் இடம் பெற்றிருக்கின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் மௌனம் காப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாதேவன் சுபாகரனுக்கு மாத்திரம் ஜே.வி.பி செல்வாக்கா??