புதினங்களின் சங்கமம்

யாழ் பாசையூர் கெமி என்ற இந்த போதைபொருள் மாபியாவை பொலிசார் ஏன் கவனிக்கவில்லை?

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்ஃஃஃஃ

இவரின் பயணம் கடற்தொழிலில் ஆரம்பமாகி பின்னர் யாழ். பாசையூர் அதனை அண்டிய பகுதிகளில் தாதாவாக செயற்பட்ட இவர் தற்பொழுது போதைப்பொருள் மொத்த வியாபாரியாக விஸ்வரூபம் அடைந்துள்ளார்.
நெடுந்தீவு, மண்டைதீவு பகுதிகளில் இருந்து கடல் மார்க்கமாக கிலோக்கணக்கில் போதைப்பொருட்களை கடத்தி வந்து பின்னர் பாசையூர், குருநகர் பகுதிகளை சேர்ந்த இவரின் தொழிலாளர்கள் மூலமா படகுகள் ஊடாகவும், வாகனங்கள் ஊடாகவும் வடமராட்சி, மற்றும் கிளிநொச்சி பகுதிகளுக்கு கடத்தி மொத்த விற்பனை செய்துவருகின்றார்.
இவர் தனது பெயரில் எந்த விதமான சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை. மாறாக அனைத்துமே பினாமிகள் பெயரில் பத்திரப்படுத்தியுள்ளார். யாழ் கணக்கர்கடை சந்திக்கும் பாசையூர் சந்திக்கும் இடையில் இவரின் அதி சொகுசு வீடு அமைந்துள்ளது. அதனை சுற்றிவர நவீன கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவரிடம் உள்ள KDH Van இல் தான் நடமாடும் சூதாட்டம் நடைபெறும். சூதாட்டம் நடந்துகொண்டிருக்கும் போது வாகனம் தொடர்ந்து ஓடியபடியே இருக்கும். அடுத்து யாழ். கோப்பாய் சந்திக்கும் கைதடிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தான் இவரின் பிரதான சூதாட்ட மையம் அமைந்திருந்தது. அது இடையில் காவல்துறையினரின் கண்துடைப்பு முற்றுகைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.
இவரது குழுவில் பாஷையூர், கொழும்புத்துறைப்பகுதியை சேர்ந்த பலர் அடக்கம். இவரிடம் இருக்கும் சொத்துக்கும் இவரின் வருமானத்துக்கும் ஏதும் தொடர்புகள் உண்டா? இவரை CID யினர் தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து பூரண புலன்விசாரணையை மேற்கொண்டால் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவரும்.