யாழில் கஞ்சா கடத்திய கடற்படைப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!!
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவருடன், பொதுமகன் ஒருவரும் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிலோ 400 கிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.