யாழ் உட்பட வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு பொலிசாரின் அவசர அறிவுறுத்தல்!!
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின் புழக்கமே அதிகமாக உள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் இவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார்எச்சரித்துள்ளனர்.
மேலும்ன் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் செயற்படுவார்களாக இருந்தால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.