புளியம்பொக்கனையில் கள்ள மண் டிப்பரை துரத்திய பொலிசார்! மின்சார வயரை அறுத்து தப்பிஓடிய றைவர்!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தியபோது நடுவழியில் டிப்பர் சாரதி மின்சார வயரை அறுத்த நிலையில் தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றிரவு (29) புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மின்சார சபைக்கு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் டிப்பர் சாரதியை கைது செய்வதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

