லொறி மோதி விபத்து – பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு.!
Peacock கடுகண்ணாவையில் உள்ள உரபொல சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் 24 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகண்ணாவை-கொழும்பு பிரதான சாலையில் பல்கலைக்கழகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர், கொழும்பு நோக்கி வாகனங்களை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு லொறியில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவருமான திவங்க பியதிஸ்ஸ (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

