டொல்பின் விபத்து!! முல்லைத்தீவைச் சேர்ந்த 5 ஆவது இளைஞனும் பலி!
கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை) ஊழியர்கள் 4 பேர் #உயிரிழந்திருந்தனர்.
இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞனும் 29.09.2025 இன்று உயிரிழந்துள்ளார்.
9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு – புதுக்குடியிருப்பினை சேர்ந்த நடராசா விஸ்னுயன் என்ற (வயது-21) இளைஞன் அனுரபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.

