புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபைக்கு முன் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!! முடங்குமா மாநகரசபை??

‘5ஜி தொழில்­நுட்­பம் மனித குலத்­தின் எதிரி எம்­மில் அதைப் பரி­சோ­திக்­காதே!’ என்ற
கோரிக்­கையை முன்­வைத்­துப் பத்­துக்கு மேற்­பட்ட பொது அமைப்­பு­கள் மக்­க­ளு­டன்
இணைந்து கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.

யாழ்ப்­பாண மாந­கர சபைக்கு முன்­பாக நாளை வியா­ழக்­கி­ழமை மு.ப. 9 மணி­ய­ள­வில்
இந்­தப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மருத்­து­வர் குழு, சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு, இலங்கை ஆசி­ரி­யர்
சங்­கம், பல்­க­லைக்­க­ழக ஊழி­யர் சங்­கம், தேசிய கலை இலக்­கி­யப் பேரவை, வல்­லமை,
கிரா­மிய உழைப்­பா­ளர் சங்­கம், சைவ மகா­சபை, சமூக விஞ்­ஞான ஆய்வு மையம், தேசிய
மீன­வர் ஒத்­து­ழைப்பு இயக்­கம், சமூக மேம்­பாட்டு அமை­யம், புதிய ஜன­நா­யக மாக்­சிச
லெனி­னி­சக் கட்சி ஆகிய அமைப்­பு­கள் இணைந்து துண்­ட­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளன.
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் மக்­கள் செறி­வாக வாழ்­கின்ற பல இடங்­க­ளி­லும் சுமார் 80
அடி உய­ர­மான கம்­பங்­கள் நடப்­பட்டு வரு­கின்­றன. இவை அதி­யுச்ச திறன்­கொண்­ட­தும்
முறை­யான பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி பன்­னாட்டு அங்­கீ­கா­ரத்­தைப்
பெற்­றுக்­கொள்­ளா­த­தும் மாறா­கப் பல்­வேறு தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள்,
ஆய்­வா­ளர்­கள், மருத்­து­வத்­துறை சார்ந்­தோர் மற்­றும் சூழ­லி­ய­லா­ளர்­க­ளால்
வன்­மை­யாக எதிர்க்­கப்­ப­டு­கின்­ற­து­மான, ஐந்­தா­வது தலை­மு­றைத்
தொலைத்­தொ­டர்­புத் தொழில்­நுட்­ப­மான 5ஜி அலைக்­கற்­றை­க­ளுக்­கா­னவை என்று
அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

மக்­க­ளின் எதிர்ப்­பு­க­ளைக் கவ­னத்­தில் எடுத்து, இந்­தச் செயற்­பாட்டை தடுத்து
நிறுத்­து­வ­தற்கு இது­வரை எந்­த­வொரு உள்­ளூ­ராட்­சிச் சபை­களோ, மாகாண, கொழும்பு
அர­சு­க­ளின் இத­னு­டன் தொடர்­பு­டைய திணைக்­க­ளங்­களோ, அர­சி­யல்­வா­தி­களோ
முன்­வ­ராமை பெரும் ஏமாற்­றத்­தைத் தரு­கின்­றது.

இந்த 5ஜி தொழில்­நுட்­ப­மா­னது, பொருள்­க­ளின் இணை­யம், தானி­யங்கி வாக­னங்­கள்,
தீவிர உயர் வரை­யறை காணொலி போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­னது.
பல்­தே­சி­யக் நிறு­வ­னங்­கள், இத்­த­கைய செயற்கை நுண்­ண­றித் தொழில்­நுட்­பத்­தை­யும்
தானி­யங்­கல் தொழில்­நுட்­பத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தன் மூலம்,
ஏரா­ள­மா­னோ­ருக்கு வேலை­யி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

மண்­ணி­லும் விண்­ணி­லும் 5ஜியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தைத் தடுப்­ப­தற்­கான
பன்­னாட்டு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அழைப்­பில், இது­வரை 187
நாடு­க­ளைச் சேர்ந்த ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் கையொப்­ப­மிட்­டுள்­ள­னர்.

*பாதிப்­புக்­கள்*

5ஜி தொழில்­நுட்­ப­மா­னது, மக்­களை மின் உணர்­தி­றன்­மிக்­க­வர்­க­ளாக
மாற்­றி­வி­டும். மின்­காந்­தப் புலத்­தின் தாக்­கத்­துக்கு உள்­ளா­கு­ப­வர்­கள், மின்
உணர்­தி­றன் மிக்­க­வர்­க­ளாக மாறு­கி­றார்­கள். மறதி, கவ­னஞ்­செ­லுத்த இய­லாமை,
இத­யத்­து­டிப்பு அதி­க­ரித்­தல், சோர்­வும் களைப்­பும், காது, கண் போன்­ற­வற்­றில் வலி
ஏற்­ப­டு­தல், வீங்­கு­தல் போன்­றன அவற்­றில் சில. இது பல­ச­ம­யங்­க­ளில்
நிரந்­த­ர­மான உட­லி­யல் உபா­தை­க­ளுக்­கும் வழி­வ­குக்­கும்.

மருத்­து­வத் தேவை­க­ளுக்­கும் கல்வி, ஆய்வு, பாது­காப்­புத் தேவை­க­ளுக்­கும் இந்­தத்
தொழில்­நுட்­பம் அவ­சி­ய­மெ­னக் கரு­தி­னால், அதைத் தேவை­யான இடங்­க­ளில் மிக­வும்
கவ­ன­மா­கப் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளு­டன் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வில், மக்­கள்
அதி­கம் வசிக்­காத பகு­தி­க­ளில் மேற்­கொள்­ள­வேண்­டும்.

எனவே, பரி­சோ­தனை எலி­க­ளாக எம்­மைப் பார்க்­கின்ற, இந்த ஆபத்­தான தொழில்­நுட்­பத்
திணிப்பை எதிர்த்து அனை­வ­ரும் அணி­தி­ரள்­வோம் – எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.