ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்.!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கியவரின் இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


