அரச அதிகாரிகள் கூட்டத்தில் ரீசேட் அணிந்து வந்த கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக்.
வட மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு அமைச்சர்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் ரீசேட் அணிந்து கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.
ஏற்கனவே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தொடர்பில் பல்வேறு முறை பாடுகள் காணப்படுகின்றது.
குறிப்பாக தன்னை சந்திக்க வரும் ஆசிரியர்கள் சேலை அணிந்து வராவிட்டால் திருப்பி அனுப்பும் செயலாளர் பற்றி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆடை ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டமை சக அதிகாரிகள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

