புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

தாவடி முருகனின் சூட்டைத் தணிக்க யாழ் வந்த தென்னிந்திய முன்னாள் நடிகை கஸ்துாரி சொன்னது என்ன?

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி, இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு( 29)நேற்றைய தினம் வருகை தந்திருந்த தென்னிந்திய திரைப்பட நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தாவடி அம்பலவாண முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு வருகை தந்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது.

இப்போதுதான் ஆங்காங்கே விகாரம் கட்டுகிறார்கள். சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் யாழ்ப்பாணம் வரை எல்லாமே அவன் அருள் மட்டுமே இருக்கிறது.

இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது.

இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி ஒலித்தன அதேபோன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான் வளம் பெறும் காட்சி அற்புதமானது. தமிழ்நாட்டில் எல்லாம் இவ்வாறு கிடையாது. எல்லாவற்றையும் அரசு எடுத்துக் கொண்டது அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள் குறியாக கொண்டிருந்தார்கள் இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே குறைந்துவிட்டது. என்ன தெரிவித்துள்ளார்.

இதே வேளை1970 ஆண்டுகளுக்கு  முற்பட்ட காலங்களில் யாழ்ப்பாணத்தில் பணம்படைத்தவர்களால் தென்னிந்தியாவிலிருந்து சின்னமேளங்கள் என அழைக்கப்படும் கூத்து ஆடும் பெண்களை யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் கொண்டு வந்து கவர்ச்சி நடனங்கள் ஆட வைப்பார்கள். அவ்வாறு ஆடி முடிந்தவுடன் அந்தப் பெண்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பணம்படைத்தவர்களின் தனிப்பட்ட அறைகளிலும் காம ஆட்டம் ஆடுவார்கள். ஆனால் கஸ்துாரி என்ற 49 வயதான முன்னாள் நடிகையான இவரை எந்த மாதிரியான நோக்கத்திற்காக முருகனிடம் அழைத்து வந்தார்களோ தெரியவில்லை. ஆனால் வந்த மனிசி யாழ்ப்பாணத்தை புகழ்ந்து தள்ளியுள்ளது மகிழ்ச்சியே…… இருப்பினும் கஸ்துாரியை ஒழுங்கு செய்து யாழ்ப்பாணம் கூட்டிவந்தவர்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து தாவடியில் தங்கியுள்ள அந்தக்காலத்து கஸ்துாரி ரசிக வெறியர்களிடம் அல்லது யாழ்ப்பாண நகைக்கடை வியாபாரிகள் அல்லது பணக்காரர்களின் கண்களில் படாதவண்ணம் பார்த்துக் கொள்வார்களா?? ………………………………. தாவடி முருகன் கோவிலுக்கு வந்த கஸ்துாரிக்குப் பின்னால் நிற்கும் ஐயரின் ஆர்வத்தைப் பார்க்கும் போது கஸ்துாரியின் அருளுரையை கேட்கும் நிலையில் ஐயர் இல்லை எனப் புரிகின்றது அல்லவா…

இதே வேளை தென்னிந்திய நடிகைகளை விட சிறப்பாக சிறப்பாக நடிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த பூர்விகா போன்ற நடிகைகளை ஆலயங்களுக்கு அழைத்து கௌரவிக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும். பூர்விகா இலங்கையிலும் துபாயிலும் பல தெய்வப்படங்களில் நடித்தவர் என்பதுடன் தற்போது கேரளாவிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

May be an image of 3 people and temple