விவாகரத்து வாங்கச் சென்ற இளம் குடும்பப் பெண்ணுடன் படுத்த நீதிபதி உதயகுமார் பதவி நீக்கம்!!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அந்த புகார் கேரள உயர்நீதிமன்றில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம்மாற்றம் செய்ய உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
