புதினங்களின் சங்கமம்

தம்பி ஏமாற்றுக்காரன்!! யாழில் விதானை சங்கர்ராஜடன் சேர்ந்து மானிப்பாய் பொலிஸ் விஜயசேகர அப்பாவிக்கு அச்சுறுத்தல்!!

மானிப்பாய் சிறுகுற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விஜயசேகரா அப்பாவி ஒருவரை சிறையில் தள்ளுவேன் எனவும் மல்லாகம் நீதிமன்றில் நாம் சொல்வதைத்தான் கேட்பார்கள்…உன்ர நியாயம் எல்லாம் செல்லாது எனவும் கூறி அப்பாவி ஒருவரை அச்சுறுத்தல் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் (J/130) பிரிவு விதானையான சங்கர்ராஜ் மற்றும் அவனது தம்பியும் கடும் ஏமாற்றுப் பேர்வழிகள் எனவும் சங்கர்ராஜின் தம்பியான சசிராஜ் தொடர்பாகவும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

யாழில் சங்கர்ராஜ் விதானையின் தம்பி சசிராஜ் செய்யும் செப்படி வித்தை!! பலர் பணத்தை பறிகொடுத்து அந்தரிப்பு!!

இதன் பின்னர் சங்கர்ராஜ் தனக்கு மானிப்பாய் பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியான விஜயசேகரவின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி பண மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பாவியை மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கடுமையான முறையில் அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது. தனது பெயரை ஏன் ஊடகங்களுக்கு வழங்கினாய் என தெரிவித்து விதானை சங்கர்ராஜ் குறித்த அப்பாவியை அச்சுறுத்தியதுடன் சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி லிஜயசேகரவும் அந்த அப்பாவியை சிறைக்குள் தள்ளுவேன் எனக் கூறியதுடன் நாளை திங்கட்கிழமை சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் முன் சங்கர்ராஜ் விதானையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கடும் தொனியில் அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.

விதானை வெங்காயம் சங்கர்ராஜ்

ஏமாற்றுப் பேர்வழிகள் சங்கர்ராஜ், சசிராஜ் குடும்பமாக

தம்பி சசிராஜ்

எமது ஊடகத்திற்கு குறித்த அப்பாவி எந்தவித தகவலும் தரவில்லை. பிரதேசசெயலக மற்றும் கோப்பாய்ப் பொலிஸ் தரப்புக்களிடமிருந்தே தகவல்களைப் பெற்றிருந்தோம். இந் நிலையில் மானிப்பாய் சிறுகுற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி குறித்த அப்பாவியை எந் நோக்கத்தில் அச்சுறுத்தி விதானையிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கின்றார் என்பதும், சிறை்ககுள் அடைப்பேன் என கூறி ”நாங்கள் சொல்வதைத்தான் நீதிமன்றம் கேட்கும்” என கூறுவதும் நீதிமன்றத்தை அவர் எவ்வாறு கையாள்கின்றார் என்பது தொடர்பாக கடும் சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது.

பச்சைக் கள்ளனான தனது தம்பி சசிராஜ்யைத் திருத்தமுடியாத சங்கர்ராஜ் வெங்காயம் அப்பாவியை ஒரு பொலிஸ்காரனின் உதவியுடன் அச்சுறுத்தி பிரதேசசெயலகத்தில் பலருக்கும் முன்னாள் மன்னிப்பு கேட்க வைப்பது என்பது நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தண்டனையா? NPP அரசாங்கத்தில் பொலிசாரும் நீதிமன்றத்தின் அதிகாரங்களுக்குள் தலையிட்டு தண்டனை கொடுக்க முற்படுகின்றார்களா?

விதானையின் தம்பி சசிராஜ் இது போல பல கதாபாத்திரங்களில் அதாவது (லீசிங் ஏஜெண்ட், வெளிநாடு அனுப்பும் முகவர்) போல நடித்து பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பணத்தை இழந்தவர்கள் இவரது வீட்டிற்கு செல்லும் போது பக்கத்து வீடு மற்றும் அயலவர் மற்றும் கிராமமக்கள் ” தம்பி உங்களுக்கு என்னெண்டு சொல்லி பொல்ல போட்டவர்” எனக் கேட்கும் அளவிற்கு இவர் பிரபலமாகியுள்ளார்.

யாழில் சங்கர்ராஜ் விதானையின் தம்பி சசிராஜால் மேலும் பலர் பாதிப்பு!! மானிப்பாய் பொலிசிடம் ஓடியது ஏன்?