புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவில் கரையொதுங்கிய மர்மப் படகு..!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடிப் படகொன்று இன்றைய தினம் (09) சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

ஆட்களற்ற நிலையில், படகினுள் மீன்பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.