புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவக் காவாலிகளுக்கிடையில் மோதல்!! 11 பேர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல்பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அனைவருமே சிங்கள மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.