புதினங்களின் சங்கமம்

மன்னாரில் முஹமட் ஷாஜகான் தலைமையிலான போதைப்பொருள் மாபியாக்கள் பெரும் அட்டகாசம்!! பொலிசாரும் துணை!!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரிகளின் செற்பாடுகள் நாளடைவில் அதிகரித்து வருகின்ற நிலையில் பேசாலை பொலிஸார் தொடர்ந்தும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக பிரதேச மக்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த முஹமட் ஷாஜகான் தலைமையிலான போதைப்பொருள் மாபியாக்களின் போதைப்பொருள் விற்பனை மற்றும் அச்சுறுத்தல்கள் நாளாந்தம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வங்காலைப்பாடு, காட்டாஸ்பத்திரி, பேசாலை, நடுக்குடா மற்றும் தலைமன்னார் போன்ற பகுதிகளில் இவர்களின் அட்டகாசம் தொடர்கின்ற போதும் பேசாலை மற்றும் தலைமன்னார் பொலிஸார் குறித்த போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, அவர்கள் தொடர்பாக பேசாலை மற்றும் தலைமன்னார் பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காட்டாஸ்பத்திரி கிராமத்து இள வயதினர், பாடசாலை மாணவர்கள் என அனைவரிடமும் குறித்த ஷாஜகான் தலைமையிலான போதைப்பொருள் மாபியாக்கள் சிறு சிறு போதைப்பொருள் பொட்டலங்களை வழங்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், ஷாஜகான் என்கின்ற போதைப்பொருள் வியாபாரி காட்டாஸ்பத்திரி கிராமத்தில் உள்ள வறிய மற்றும் கணவனை இழந்த பெண்களிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த போதைப்பொருள் வியாபாரி தலை நிமிர்ந்து நிற்க பேசாலை மற்றும் தலைமன்னார் பொலிஸாரின் ஆதரவு நாளந்தம் கிடைப்பதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த போதைப்பொருள் வியாபாரிக்கு மன்னாரைச் சேர்ந்த ஒரு சில சட்டவாதிகளும் பணத்தை பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஷாஜகான் எனப்படும் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த குறித்த போதைப்பொருள் வர்த்தகருடன் மன்னாரைச் சேர்ந்த ஒரு சில சட்டவாதிகள், பொலிஸார், அரசியல் சார்ந்தோர் உள்ளிட்ட பலர் தொலைபேசியில் உரையாடிய பல்வேறு உரையாடல்கள் எமது செய்திச் சேவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்கின்ற குறித்த போதைப்பொருள் மாபியா அதே பகுதியைச் சேர்ந்த சஜி என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக கதைக்கின்ற காணொளி பதிவையும் வெளியிடுகின்றோம்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த ஒரு சில சட்டவாதிகள் மற்றும் பொலிஸார் குறித்த போதைப்பொருள் மாபியாவுடன் கதைத்த குரல் பதிவுகளையும் எமது செய்திச் சேவை வெளியிடவுள்ளது.

எனவே, மன்னார் மக்களின் நலனை கருத்திற்கொண்டு பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.